சிலை அமைப்பு
- திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.
- சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.
- மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
சிலை குறிப்புகள்
- மொத்த சிலையின் உயரம் - 133 அடி
- சிலையின் உயரம் - 95 அடி
- பீடத்தின் உயரம் - 38 அடி
- சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
- சிலையின் மொத்த எடை - 7,000 டன்
- சிலையின் எடை - 2,500 டன்
- பீடத்தின் எடை - 1,500 டன்
- பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்
சிலை அளவுகள்
- முக உயரம் - 10 அடி
- கொண்டை - 3 அடி
- முகத்தின் நீளம் - 3 அடி
- தோள்பட்டை அகலம் -30 அடி
- கைத்தலம் - 10 அடி
- உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
- இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
- கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி
திருக்குறள்:
அன்பு - அறிவு - ஆற்றல் எனும் முக்கூட்டு வடிவத்தின் உருவமே திருவள்ளுவர். அறம் - பொருள் - இன்பம் எனும் முக்கருத்துக்கூட்டின் - முதன்மை நூலே திருக்குறள். திருவள்ளுவர் என்கிற பெருமகன், ஆற்றல் பொருந்திய தாக்கத்தோடு தந்திருப்பது, தமிழர்களின் தனி வாழ்க்கைக்குறிய தமிழ்மறை!.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு! அந்த வரிகளைச் சொல்லும்போதெல்லம், உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் தமிழனுக்கும் இதயம் இறும்பூது எய்துவது இயற்க்கை!
தமிழ், தமிழன், தமிழ்ப்பண்பாடு முதலியவற்றைப் பிறநாட்டு அறிஞர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து கொண்டதோடு மட்டுமன்றி அதனை உலகினுக்கும் பறைசாற்றக் காரணமாக இருந்ததும் இந்த அமுதின் இனிய திருக்குறள்தான்.
உணவெடுதத உடல்களும் தினவெடுத்த தோள்கனுமாக இருந்த மன்னர்களும், திடீரென்று பக்கத்து நாடுகளின்மீது படையெடுப்பதும், அந்த நாட்டை அலங்கோலப்படுத்துவதும், அங்குள்ள ஆநிரை, அணிமணிகளைச் சூறையாடுவதும், அங்கிருக்கும் பெண்டுபிள்ளைகளை இழுத்து வந்து விரும்பியப்படியெல்லாம் இன்பம் துய்ப்பதுமாக இருந்த சூழலைக் கண்டு, மனம் துவண்டு போயிருந்த திருவள்ளுவர், அறம், பொருள், இன்பம் மனித வாழ்க்கையில் எவ்வாறு இருக்க வேண்டும் என வரையறை செய்தார்.
இதுதான் நாடு, இதுதான் அரசு, இது தான் இல்லறம், இதுதான் துறவறம், இதுதான் பெண்ணியம், இதுதான் கற்பு என்றெல்லாம் கோடுபோடுக் காட்டினார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் அவர் போட்டுக்காட்டுய பொற்கோடுதான் இன்றும்கூட நமக்கெல்லாம் வாழ்க்கையின் எல்லைக் கோடாக இருக்கின்றது.
திருவள்ளுவர் வரலாறு:
திருக்குறள் எனும் திருநூலை இயற்றி உலகுக்கு வழங்கிய திருவள்ளூவப் பெருமான், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். வள்ளுவர் வாழ்ந்த காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டின் மையப்பகுதி என்று கூறுதல் சாலப் பொருந்துமென்று தமிழறிஞர்கள் தம் ஆய்வுகளின்வழி உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
திருவள்ளுவர் மயிலையிலும் பின்பு மதுரையிலும் மாறி மாறி வாழ்ந்ததாக ஆய்வுக் குறிப்பு உறுதிப்படுத்துகிறது.. திருவள்ளுவர் எந்தச் சமயத்தைப் பின்பற்றினார் என்று கூறவியலாது. திருக்குறள் வெண்பாக்களில் கடவுள் தன்மை சார்ந்திருக்கக் காணவில்லை. எனவே, எந்தச் சமயத்தையும் சாராது பொதுவான வாழ்வியல் பயனைல் கூறுவதாக வள்ளுவர் சமயம் அமைந்தது.
திருவள்ளுவரின் தாய் தந்தையர் யார் என்று விவரமாகத் தெரியவில்லை. வரலாறு எழுதும்போது தன் தாய் தந்தையரைத் துருவித் தேடி எழுதுவது வரலாறூ எழுதுவோரின் வழக்கமாக இருந்திருக்கின்றது. ஆனால், வள்ளுவர் பெருமானைப் பொருத்தவரை அது சாத்தியமில்லாமலே போனதென்று புரிகின்றது.
- திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
- திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
- திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
- திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
- திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
- திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
- திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
- திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
- திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
- ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.
- திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
- திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
- திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
- திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
- திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
- திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
- திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
- திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து-னி
- திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது "பற்று" - ஆறு முறை.
- திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
- திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் ( அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது, இதில் ஆதி பகவன் - என்பது கடவுளை குறிக்கிறது)
- திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
- திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
- திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
- திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
- திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
- எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
- ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
- திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
- திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
- திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment