Tuesday, July 19, 2016

ஒரு மனிதனின் வாழ்வில் அதி சிறப்புள்ளது திருமணம் அந்த திரு மணத்தின் தத்துவம்.



ஒரு மனிதனின் வாழ்வில் அதி சிறப்புள்ளது திருமணம் அந்த திரு மணத்தின் தத்துவம்.

ஆக்கம்.மார்க்கண்டு தேவராஜா(LLB)MP.TGTE.மயூராகோல்ட்ஸ்மித்  சுவிஸ் .....ஒன்பது என்ற கோட்பாட்டை உள்நுழைத்து ஒன்பது இளைத்தாலி என்று ஒரு வியாக்கியானம் கொடுத்து பொதுவாக எல்லா ஊடகங்களிலும் எழுதித் தள்ளுகிறார்கள் அப்படியானால் தாலிக்கும் இந்த ஒன்பது இழைக்கும் என்ன சம்பந்தம் இதற்கு யாராவது தெளிவு படுத்தி விளக்கம் கொடுத்துள்ளனரா.இது ஏன். இந்த ஒன்பது இளை என்பது யாரோ ஒருவரால் நுழைக்கப்பட்டதே தவிர தாலிக்கும் ஒன்பது இளைக்கும் எதுவித சம்பந்தமும் இல்லைஇந்த ஒன்பது இழைத்தத்துவம் என்பது (அது ஒரு பெண்ணடிமைச் சாசனம்)அதில் வேறெந்த உண்மையும் இல்லை.
முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் தாலி செய்யும் ஒவ்வொரு விஸ்வப்பிரம்ம குலத்தவரும் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்
பரவலாக எல்லாப் பத்திரிகைகளிலும் இணையங்களிலும் உலகில் உள்ள, தமிழ் எழுத்தாளர்களும், கல்வி மான்களும், தத்துவ அறிவாளிகளும்,கூறுவது தாலி எனும் பொழுது இந்த ஒன்பது இளை,தத்துவம் என்று பெண்களை அடிமைப் படுத்துவதாகவே பொருள் படுகிறது.இலக்கம் அல்லது எண் ஒன்பதுக்கு உள்ள தத்துவம் வேறு தாலிக்கு உரிய ஒன்பது என்பது வேறு என்றே கூறவேண்டும்.
இது தாலியை அணிவிக்கும் ஆணுக்கும் பொருந்தும்,
தாலிக்குப் பொன் உருக்கும் விஸ்வப்பிரம்மகுலஆசாரிக்கும் பொருந்தும் இந்த ஒன்பது எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் என்பதே உண்மையான  அடிப்படைத் தத்துவம் இவை புரியாமல் அல்லது விளங்காமல் திரிபு படுத்தப்பட்டவையே இந்த ஒன்பது இழைத் தத்துவம் என எங்கு வேண்டுமானாலும் வாதிடலாம்.ஒன்பதின் மகத்துவமே வேறு அதை ஒன்பது சொல்லில் சுருக்கி பெண்ணினத்தை அடிமைப்படுத்தும் தாலி எனும் கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது,
அவையாவன,
1,
தெய்வீகக் குணம்,
2,
தூய்மைக் குணம்,
3,
மேன்மை,
4,
தொண்டு,
5,
தன்னடக்கம்,
6,
ஆற்றல்,
7,
விவேகம்,
9,
உண்மை, உள்ளதைஉள்ளபடி புரிந்து கொள்ளுதல்.
இத்தனைக் குணங்களும்ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும்.இதற்கும் தாலிக்கும் என்ன சம்பந்தம்
இதில் என்ன தெரிந்து கொள்கிறீர்கள் முழுவதும் பெண்ணடிமையே இதில் பெரும் ஆச்சரியம் என்னவெனின்.சிலப்பதிகாரத்தின் அடிப்படையில் தான் இளங்கோவடிகளின் எழுத்தில்தான்.இவர்களின் அடிப்படைவாதமே வருகிறது.
திருமணமாகாத ஒரு புத்ததுறவியே இளங்கோவடிகள் அவர் ஒரு பிரம்மச்சாரி அப்படிப்பட்டவர் எப்படி திருமணத்திற்கு உரிய தாலிக்கு சிலப்பதிகாரத்தில் விளக்குவது,
இது பொய்த் தகவலே.அதன் அடிப்படையில் ஏனையோரும் கருத்துக் கூறுவது பெரியஆச்சரியமாக இருக்கிறது ஒருவருடைய திருமணவாழ்வில்(அதை ஆயிரம் காலத்துப் பயிர் என்று கூறும் பொழுது) அதை ஒன்பது இளை என்று வரையறுத்து தாலி அணியும் பெண்ணை மட்டும் கட்டுப்படுத்தி அடிமைப்படுத்தும் இந்த குறுகிய
எண்ணம் கொண்டதா இந்தச் சிலப்பதிகாரம்,
உலகம் தோன்றிய போதே
1,
பிரம்ம புராணம்,
2,.
கிருஷ்ண புராணம்,
3,
சிவபுராணம்,
4,
வைஷ்ணவ புராணம்,
5,
கந்தபுராணம், என பல புராணம்களும் இதிகாசம்களும் திருமணத்தின் பந்தத்தில் இணையும் பொழுது அங்கும் இந்தத் தாலியின் மகிமை உணர்த்தப் பட்டுள்ளது பல ஆயிரம் ஆண்டுப் பெருமையுள்ள விடயம் மறைக்கப்பட்டு.ஒன்பது இளைக்குள் அடக்கிப் பெண்ணடிமை விளக்கமா இந்த ஒன்பது இளை.என்பது,
தாலி அணிந்த பெண் கணவன் இறக்கும் வரை அதைக் கழுத்தில் இருந்து கழட்டவே கூடாது என்பதே உண்மை.
10 வருடம் 16,வருடங்களில் தாலியை புதுப்பிக்கலாம் ஏனெனில்.
பதிவிரதைக்குப் பத்து எனும் பழமொழியும் உண்டு.பதினாறு பெரும்பேறு 16,வருடங்கள் கடந்தால் அந்தப்பெண் பூரண அனுபவம் பெற்றுக்கொண்டு அடுத்தவருக்கு ஆலோசனை வழங்கும் தகுதியும் பெற்றவள் என்பதே தேர்ச்சி பெற்றவருக்குச் சிறப்புச் சான்றிதல் போன்று கூட இவ்விடயத்தை வைத்துக் கொண்டால்.பொருந்தும்,
ஆனால் திருமணச் சடங்கின் போது தாலி பிரிப்பது என்பது ஒரு சடங்காகவே இருக்கிறது.அதுவும் மூன்று மாதத்தில்தாலிகட்டி மூன்று மாதத்தில் அந்தத் தாலியைக் கழட்டுவது எவ்வளவு மடமைத்தனம் இப்பொழுது புரிகிறதா.மஞ்சள் நூலில் தாலியைக் கட்டி அதை மாற்றுவது மஞ்சள்கயிற்றில்
மஞ்சளைத் தாலியாக அணிவதை மூன்றுமாதத்தில்ப் பிரிப்பது.இதை இவர்களின் வசதிக்கு ஏற்றவாறு மாற்றி தங்கத்தில் தாலியும் அதை மஞ்சள்கயிற்றில் கட்டுவதும் பிரிப்பதும்.இதற்குப் புரோகிதர்களும் சேர்ந்து சிறுபிள்ளை விளையாட்டு விளையாடுவது
மூன்றுமாதத்தில் தாலியைப் பிரிப்பதாக ஒரு சடங்கு நடத்துகிறார்கள்.திருமனத்திட்கும் இந்த மூன்றுமாதத்திட்கும் என்ன தொடர்பு என்று பார்க்கும் பொழுது அதில் நிறைய தத்துவார்த்தம் நிறைந்திருக்கிறது. இதற்கும் வேறு அர்த்தம் உண்டு இதைப்பற்றி நிறையவே எழுதிக் கொண்டு போகலாம்.
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவே வாழ்த்துவார்கள்.
அதைச் சுருக்கி ஒன்பதாக வாழ்த்த மாட்டார்கள்.திருமணத்திற்கு. பன்னிரண்டு வகைப் பொருத்தமே பார்ப்பார்கள்.அதைச் சுருக்கி ஒன்பது பொருத்தம் பார்ப்பதில்லை.
தாலியில் 12,க்கும் மேவ்ட்பட்ட வகை உள்ளது.அதைஒன்பது வகையாகச் சுருக்கினால் சில பரம்பரை சார்ந்த குடிவளியினருக்கு திரு மணத்தின் போது தாலி கட்டவே முடியாது,சம்பிரதாயத்தைத் திரித்துக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.பன்னிரண்டு பொருத்தம் பார்ப்பதற்கு ஏற்றவாறு பன்னிரண்டு தாலிகள்.

அவையாவன,
1,
பிள்ளையார் தாலி,
2,
அம்மன் தாலி,
2,
லட்சுமி தாலி,
3.
கொம்புத் தாலி,
4,
மூன்று கொம்புத் தாலி,(விஸ்வப்பிரம்ம குலத்தாருக்கு உரியது)
5,
லிங்கத் தாலி,
6,
புலிப்பல் தாலி,
7,
பாப்பயத் தாலி,
8,
பவளத் தாலி,
9,
பொட்டுத்தாலி,
10,
சிவ தாலி,
11,
புறாத் தாலி,
12.
கிருஸ்ண தாலி,
இன்னும் சில தாலிகள் குடிவளிசார்ந்து காணிக்கையாக ஆலயத்திற்கும் சில திருமண தோஷங்களுக்கும் நிவாரணம் பெற செய்து கொடுப்பது வழக்கம்.சில தாலிகளை அமர்ந்த நிலையிலக் கட்டுவதும் சில தாலிகளை நின்ற நிலையில்க் கட்டுவதும் சம்பிரதாயமாக உள்ளது.
இந்த ஒன்பது இழைத்தாலி என்று  திருமணத்தின் போது கட்டப்படும் சம்பிரதாயங்கள் கடைப் பிடிக்கப் படுவதன் அர்த்தம்,ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
9ன் சிறப்பு அல்லது 9 எண்ணின் சிறப்புக்களை இன்னும் எவ்வளவோ வகுத்துச் சொல்லலாம்.
எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும்அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர்,
சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது.
எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன.
புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும்.
தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்த தரத்தை 999 என்று மதிப்பிடுவார்கள்.
பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!
ஒன்பது  இன்னும் பல அரிய மகத்துவங்கள் கொண்டது. ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர். நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.

நவ சக்திகள்:
1,
வாமை,
2,
ஜேஷ்டை,
3,
ரவுத்ரி,
4,
காளி,
5,
கலவிகரணி,
6,
பலவிகரணி,
7,
பலப்பிரமதனி,
8,
சர்வபூததமனி,
9,
மனோன்மணி,
நவ தீர்த்தங்கள்:
1,
கங்கை,
2,
யமுனை,
3,
சரஸ்வதி,
4,
கோதாவரி,
5,
சரயு,
6.
நர்மதை,
7,
காவிரி,
8,
பாலாறு,
9,
குமரி
நவ வீரர்கள்:
1,
வீரவாகுதேவர்,
2,
வீரகேசரி,
3,
வீரமகேந்திரன்,
4,
வீரமகேசன்,
5,
வீரபுரந்திரன்,
6,
வீரராக்ஷசன்,
7,
வீரமார்த்தாண்டன்,
8,
வீரராந்தகன்,
9,
வீரதீரன்
நவ அபிஷேகங்கள்:
1,
மஞ்சள்,
2,
பஞ்சாமிர்தம்,
3,
பால்,
4,
நெய்,
5,
தேன்,
6,
தயிர்,
7,
சர்க்கரை,
8,
சந்தனம்,
9,
விபூதி.
நவ ரசம்:
1,
இன்பம்,
2,
நகை,
3,
கருணை,
4,
கோபம்,
5,
வீரம்,
6,
பயம்,
7,
அருவருப்பு,
8,
அற்புதம்,
9,
சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.
நவக்கிரகங்கள்:
1,
சூரியன்,
2,
சந்திரன்,
3,
செவ்வாய்,
4,
புதன்,
5,
குரு,
6,
சுக்கிரன்,
7,
சனி,
8,
ராகு,
9.
கேது
நவமணிகள்:-
நவரத்தினங்கள்:
1,
கோமேதகம்,
2,
நீலம்,
3,
வைரம்,
4,
பவளம்,
5,
புஸ்பராகம்,
6,
மரகதம்,
7,
மாணிக்கம்,
8,
முத்து,
9,
வைடூரியம்
நவ திரவியங்கள்:
1,
பிருதிவி,
2,
அப்பு,
3,
தேயு,
4,
வாயு,
5,
ஆகாயம்,
6,
காலம்,
7,
திக்கு,
8,
ஆன்மா,
9,
மனம்
நவலோகம் (தாது):
1,
பொன்,
2,
வெள்ளி,
3,
செம்பு,
4,
பித்தளை,
5,
ஈயம்,
6,
வெண்கலம்,
7,
இரும்பு,
8,
தரா,
9,
துத்தநாகம்
நவ தானியங்கள்:
1,
நெல்,
2,
கோதுமை,
3,
பாசிப்பயறு,
4,
துவரை,
5,
மொச்சை,
6,
எள்,
7,
கொள்ளு,
8,
உளுந்து,
9,
வேர்க்கடலை
சிவ விரதங்கள் ஒன்பது:
1,
சோமவார விரதம்,
2,
திருவாதிரை விரதம்,
3,
உமாகேச்வர விரதம்,
4,
சிவராத்ரி விரதம்,
5,
பிரதோஷ விரதம்,
6,
கேதார விரதம்,
7,
ரிஷப விரதம்,
8,
கல்யாணசுந்தர விரதம்,
9,
சூல விரதம்
நவசந்தி தாளங்கள்:
1,
அரிதாளம்,
2,
அருமதாளம்,
3,
சமதாளம்,
4,
சயதாளம்,
5,
சித்திரதாளம்,
6,
துருவதாளம்,
7,
நிவர்த்திதாளம்,
8,
படிமதாளம்,
9,
விடதாளம்
அடியார்களின் பண்புகள்:
1,
எதிர்கொள்ளல்,
2,
பணிதல்,
3,
ஆசனம் (இருக்கை) தருதல்,
4,
கால் கழுவுதல்,
5,
அருச்சித்தல்,
6,
தூபம் இடல்,
7,
தீபம் சாட்டல்,
8,
புகழ்தல்,
9,
அமுது அளித்தல்,
(விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)
1,
நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி,
2,
க்ஷணபகர்,
3,
அமரஸிம்ஹர்,
4,
சங்கு,
5,
வேதாலபட்டர்,
6,
கடகர்ப்பரர்,
7,
காளிதாசர்,
8,
வராகமிஹிரர்,
9,
வரருசி
அடியார்களின் நவகுணங்கள்:
1,
அன்பு,
2,
இனிமை,
3,
உண்மை,
4,
நன்மை,
5,
மென்மை,
6,
சிந்தனை,
7,
காலம்,
8,
சபை,
9,
மவுனம்.
நவ நிதிகள்:
1,
சங்கம்,
2,
பதுமம்,
3,
மகாபதுமம்,
4,
மகரம்,
5,
கச்சபம்,
6,
முகுந்தம்,
7,
குந்தம்,
8.
நீலம்,
9.
வரம்
நவ குண்டங்கள்:
யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான
யாக குண்ட அமைப்புக்கள்:
1,
சதுரம்,
2,
யோனி,
3,
அர்த்த சந்திரன்,
4,
திரிகோணம்,
5,
விருத்தம் (வட்டம்),
6.
அறுகோணம்,
பத்மம்,
எண்கோணம்,
பிரதான விருத்தம்.
1,
நவவித பக்தி :
2,
சிரவணம்,
3,
கீர்த்தனம்,
4,
ஸ்மரணம்,
5,
பாத சேவனம்அர்ச்சனம்,
6,
வந்தனம்,
7,
தாஸ்யம்,
8,
சக்கியம்,
9,
ஆத்ம நிவேதனம்
நவ பிரம்மாக்கள் :
1,
குமார பிரம்மன்,
2,
அர்க்க பிரம்மன்,
3,
வீர பிரம்மன்,
4,
பால பிரம்மன்,
5,
சுவர்க்க பிரம்மன்,
6,
கருட பிரம்மன்,
7,
விஸ்வ பிரம்மன்,
8,
பத்ம பிரம்மன்,
9,
தராக பிரம்மன்
நவக்கிரக தலங்கள் -
1,
சூரியனார் கோயிவில்,
2,
திங்களூர்,
3,
வைத்தீஸ்வரன் கோவில்,
4,
திருவெண்காடு,
5,
ஆலங்குடி,
6,
கஞ்சனூர்,
7,
திருநள்ளாறு,
8,
திருநாகேஸ்வரம்,
9,
கீழ்ப்பெரும்பள்ளம்
நவபாஷாணம் -
1,
வீரம்,
2,
பூரம்,
3,
ரசம்,
4,
ஜாதிலிங்கம்,
5,
கண்டகம்,
6,
கவுரி பாஷாணம்,
7,
வெள்ளை பாஷாணம்,
8,
ம்ருதர்சிங்,
9,
சிலாஷத்
நவதுர்க்கா -
1,
ஸித்திதத்ரி,
2,
கஷ்முந்தா,
3,
பிரம்மாச்சாரினி,
5,
ஷைலபுத்ரி,
7,
மகா கவுரி,
8,
சந்திரகாந்தா,
9,
ஸ்கந்தமாதா,
6.
மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி
நவ சக்கரங்கள் -
1,
த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,
சர்வசாபுரக சக்கரம்,
3,
சர்வ சம்மோகன சக்கரம்,
4,
சர்வ சவுபாக்ய சக்கரம்,
5,
சர்வார்த்த சாதக சக்கரம்,
6,
சர்வ ரக்ஷõகர சக்கரம்,
7,
சர்வ ரோஹ ஹர சக்கரம்,
8,
சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,
சர்வனந்தமைய சக்கரம்.
நவநாதர்கள் -
1,
ஆதிநாதர்,
2,
உதய நாதர்,
3,
சத்ய நாதர்,
4,
சந்தோஷ நாதர்,
5,
ஆச்சாள் அசாம்பயநாதர்,
6,
கஜ்வேலி கஜ்கண்டர் நாதர்,
7,
சித்த சொவ்றங்கி
8,
நாதர், மச்சேந்திர நாதர்,
9,
குரு கோரக்க நாதர்
உடலின் நவ துவாரங்கள் :
இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள்,
இரண்டு மூக்குத் துவாரங்கள்,
ஒரு வாய்,
இரண்டு மலஜல துவாரங்கள்
உடலின் ஒன்பது சக்கரங்கள் :
1,
தோல்,
2,
ரத்தம்,
3,
மாமிசம்,
4,
மேதஸ்,
5,
எலும்பு,
6,
மஜ்ஜை,
7,
சுக்கிலம்,
8,
தேஜஸ்,
9,
ரோமம்
18 புராணங்கள்,
18
படிகள் என அனைத்தும்
9-
ன் மூலமாக தான் உள்ளன.
காயத்ரி மந்திரத்தை
108
முறை ஜபிக்க வேண்டும்.எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜபமாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான்!
புத்த மதத்தினர்
108
முறை மணியடித்து,
புது வருடத்தை வரவேற்றுக்
கொண்டாடுகின்றனர்.
சீனாவில்,
36
மணிகளை
மூன்று பிரிவாகக் கொண்டு,
சு ஸூ எனப்படும்
மாலையைக் கொண்டு
ஜபம் செய்வார்கள்.
ஸ்ரீகிருஷ்ணருக்குப்
பிரியமான மாதம்... மார்கழி.
இது வருடத்தின் 9-வது மாதம்!
மனிதராகப் பிறந்தவன்
எப்படி வாழ வேண்டும் என
வாழ்ந்து காட்டிய
ஸ்ரீராமபிரான் பிறந்தது,
9-
ஆம் திதியான
நவமி நாளில்தான்.
9
என்ற எண்ணை
கேளிக்கையாக எண்ணாமல்
புராணங்களிலும்,
நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை
போற்றுவோம்.
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது கூட்டு எண் 9 உள்ளவர்கள்
இயற்கையிலேயே துடிப்பும், வேகமும் கொணட் 9 எண்காரர்களின் சிறப்பு இயல்புகளை இங்கு விவரமாகப் பார்ப்போம். இந்த எண்ணின் நாயகர் முருகப் பெருமான் அவரே தேவர்களுக்குச் சேனாதிபதியாவார். எனவே சேனாதிபதிக்குள்ளகட்டுப்பாடும், திறமையும், சவால்களைத் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையும் இவர்களுக்கு உண்டு. இரத்தத்தைப் பார்த்து இவர்கள் பயப்பட மாட்டார்கள். தெருச் சண்டை, யுத்தக்களம் போன்ற இடங்களில் இவர்களைப் பார்க்கலாம். மேலும் அதிகாரமுள்ள காவல்துறை, இராணுவம் ஆகிய தொழிலில் மிகவும் விருப்பம் உடையவர்கள் இவர்கள்தான்! மற்றவர்கள் பயப்படும் காரியங்களைத் துணிந்து ஏற்றுக் கொள்வார்கள். துணிவே துணை என்று நடை போடுவார்கள். இவர்களுக்கு முன்கோபமும் படபடப்பும் உண்டு. உடலும் சற்று முறுக்கேறி நிற்கும். நான்கு எண்காரர்களைப் போல் இவர்களுக்குக் கோபம், ரோஷம், தன்மானம் ஆகிய மூன்று குணங்களும் நிறைந்திருக்கும். எனவே இவர்களுக்கு எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எத்தொழிலிலும், பதவியிலும், நிர்வாகத்திலும் வல்லவர்கள். இவர்கள் ஓரளவு ஒல்லியானவர்களே! ஆண்களில் பெரும்பாலோர் மீசை வளர்ப்பதில் விருப்பம் உடையவர்கள். நாவன்மை மிகுந்தவர்கள்.
இவர்களில் அதிர்ஷ்டசாலிகள் மென்மேலும் அதிர்ஷ்டசாலிகளாகவும், துரதிர்ஷ்டசாலிகள் தொடர்ந்து துரதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள். இந்த எண்காரர்களுக்கு உடலில் அடிக்கடி காயங்கள், விபத்துக்கள் போன்றவை ஏற்படும். ஆயினும் அதைக் கண்டு பயப்பட மாட்டார்கள். 9-ம் எண்ணில் பிறந்தவர்களின் பெயர்கள் 8&ம் எண்ணில் மட்டும் இருந்து விட்டால் தற்கொலை முயற்சிகளும், வாகனங்களால் விபத்து உண்டு. இந்தச் செவ்வாய்க் கிரக ஆதிக்கர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் லாரி, காளை மாண்டு வண்டிகள், குஸ்தி, நீச்சல் போட்டிகள், மிருகவேட்டை, உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் மிகவும் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். சர்க்கஸ் விளையாட்டுக்களில் விருப்பமுடன் ஈடுபடுபவர்கள் இவர்கள்தான். கார், சைக்கிள், லாரி, பஸ் ஆகியவற்றை மிகவும் வேகமாக ஓட்டுபவர்கள் இவர்கள் தான். இவர்கள் எதற்கும், எப்போதும் பயப்பட மாட்டார்கள்! மேலும் தங்களது நோக்கத்திற்காகக் கடுமையான உழைக்கவும் தயங்க மாட்டார்கள். இவர்கள் எப்போதும் அலைபாயும் மனத்தை உடையவர்களாக இருப்பார்கள். இறைவன் இவர்களின் மனத்தை அமைதியாக வைத்திருக்க அனுமதிப்பதில்லை போலும்! இவர்கள் நடப்பதில் மிகவும் பிரியமுடையவர்கள்! இவர்களுக்கு என்னதான் வசதியிருப்பினும் கால் தேய நடந்து செல்வதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும், தனியார் ஸ்தாபனங்களிலும் தலைமைப் பதவியில் இவர்கள் நன்கு புகழ் பெறுவார்கள். இவர்கள் உழைப்பதில் சுகம் காண்பார்கள். சோம்பலை இவர்கள் வெறுப்பவர்கள். ஊர் சுற்றுவதிலும் அலாதிப் பிரியம் உடையவர்கள்.
நடுரோட்டில் ஒரு நோஞ்சானை ரௌடி ஒருவன் தாக்கினால் அதைக் கண்டு பொறுக்காமல், அந்த முரடனுடன் தைரியமாகச் சென்று போராடுபவர்கள் இவர்கள்தான். சிறு வயதுகளில் மிகவும் சிரமப்பட்டாலும், தங்ளது மன உறுதியினாலும், விடா முயற்சியினாலும், இவர்கள் எப்படியும் பிற்காலத்தில் முன்னேறி விடுவார்கள். இவர்கள் சுதந்திரப் போக்கு உடையவர்கள்! அவசரக்காரர்கள்! உணர்ச்சி மயமானவர்கள்! பிடிவாத குணம் இயற்கையிலேயே உண்டு. ஆபத்து மிகுந்த தொழிலில் இறங்கி விடுவார்கள். அதில் வெற்றியும் பெறுவார்கள். இவர்களின் சண்டைக் குணத்தால், குடும்பத்தில் அடிக்கடி குடும்பப் பிரச்சனைகள் ஏற்படும். தங்களை எல்லோரும் மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு இவர்களுக்கு எப்போதும் உண்டு. எந்த நிர்வாகத்திலும் தலைமைப் பதவி அல்லது பொறுப்புகள் கிடைத்தால்தான், இவர்கள் அவற்றில் மிகவும் தீவிரமாகவும், சிறப்பாகவும் ஈடுபட்டு, அந்தக் காரியங்களைச் செய்து முடிப்பார்கள். இல்லை என்றால் அவைகளை அப்படியே விட்டுவிட்டு ஒதுங்கி விடுவார்கள். பின்பு அந்தக் காரியங்கள் கெட்டழிந்தாலும்கூட அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டார்கள்.
சிறப்புப் பலன்கள்
செயல் வீரர்களான 9ம் எண்காரர்களின் சிறப்புப் பலன்களைப் பார்ப்போம்.
எண்களில் முடிவானது இந்த எண்தான். எந்த எண்ணுடன் சேர்ந்தாலும், தன் இயல்புக் குணத்தை இழக்காதது இந்த எண்தான். 3 எண்ணுடன் 9 சேர்ந்தால் 12 கிடைக்கும். மீண்டும் கூட்டினால் (1+2) 3 என்ற எண்ணே மீண்டும் கிடைக்கும்.
எனவே 9 எண்காரர்கள் மற்ற எண்காரர்களுடன் சேர்ந்து செயல்பட்டுத் தங்களின் இயல்பிறக்கு ஏற்றவாறு அவர்களை மாற்றிவிடும் திறமை படைத்தவர்கள்! இவர்கள் தீவிரமான மனப்போக்கும், தைரியமான செயல்பாடும் கொண்டவர்கள். எந்த முயற்சியையும் திட்டமிட்டு, அதன்படியே செயல்படுவார்கள். எத்துணைச் சோதனைகள் வந்தாலும், அவைகளைத் துணிவுடன் சந்தித்து வெற்றி பெறுவார்கள்! மற்றவர்கள் இவர்களை அலட்சியம் செய்தால் உடனே தட்டிக் கேட்பார்கள். மனதில் எப்போதும் தைரியம், தன்னம்பிக்கை உண்டு. தவறுகளைக் கண்டால் உடனே தட்டிக் கேட்கவும் தயங்கமாட்டார்கள்.
எதையும் திட்டமிட்டு, நேரம், காலம் பார்த்துத் தங்களது காரியங்க¬ளை நடத்துக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் எதையும் போராடித்தான் பெற வேண்டும். இவர்களது பேச்சில் எப்போதும் வேகமும், அதிகாரமும் உண்டு! பயம் என்பது இருக்காது! செவ்வாய்க் கிரகம், தேவர்களுக்குத் தளபதியாவார். எனவே இவர்களுக்கச் சண்டையிடும் மனோபாவம் இயற்கையிலேயே அமைந்துவிடும். இரத்தம், விபத்து, கொலை போன்ற சம்பவங்களிலும் எல்லாம் துணிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வார்கள். வேகம், சக்தி, அழிவு, போர் என்பவற்றின் எண் இது! ஆற்றல், ஆசை, தலைமை தாங்குதல் ஆதிக்கம் செலுத்தல் போன்ற குணங்கள் இவர்களிடம் இருக்கும். எதையும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சிந்திக்க மாட்டார்கள். விரைவிலேயே ஒரு முடிவு எடுத்து அதை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவார்கள். பலருக்கு உடலில் காயங்களும், சிறு விபத்துக்களும் ஏற்படும். பெரும்பாலோர் போர் வீரர்கள், காவல் துறை, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற கடினமான துறைகளிலும் புகழ்பெற்று விளங்குவார்கள்.
இவர்கள் நிதானம் குறைந்தவர்கள்! உணர்ச்சி வசப்பட்டவர்கள், பிறருக்கு அடங்கி நடக்க முடியாதவர்கள். பகைவர்களை இவர்களே உருவாக்கிக் கொள்வார்கள். பல சமயங்களில் இவர்களது பேச்சே இவர்களுக்குப் பல சண்டைகளைக் கொண்டு வந்துவிடும். பங்காளிச் சண்டை, மனைவி குடும்பத்தாருடன் சண்டை என்று அடிக்கடி பிரச்சினைக்குள்ளாவார்கள்! பிறர் தங்களைக் குறை கூறவதை மட்டும் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது! சந்தர்ப்பங்களைச் சமாளிக்கும் திறமையும், சிறந்த நிர்வாக ஆற்றலும் உண்டு! அதிகாரத்துடன் மற்ற அனைவரையும் வேலை வாங்குவார்கள். இல்லையெனில் மனம் உடைந்து போவார்கள். இவர்கள் பல ஊர்களைச் சுற்றிப் பார்க்க விரும்புவார்கள். பலர் வெளிநாடுகளுக்கும் சென்று வருவார்கள். இவர்கள் ஆன்மீகத் தலைவர்களைக் கண்டவுடன் பணிந்து மிகவும் மதிப்பு கொடுப்பார்கள். பலருக்கு முன்னோர்கள் தேடி வைத்த செல்வங்கள் இருக்கும். இவர்களுக்கு மனைவியின் வழி சொத்துக்கள் கிடைக்கும் யோகமும் உண்டு. எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்ளும் மனோ தைரியமும் உண்டு. இவர்கள் கூர்மையான அறிவுடையவர்கள். எதிரிகளைச் சமயம் அறிந்து அவர்களை அழித்துவிடும் இயல்பினர். தீவிரமான ஆராய்ச்சிகளில் பலர் ஈடுபடுவார்கள். இவ்வளவு இருப்பினும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு மிகவும் மதிப்புக் கொடுப்பார்கள். தெய்வம் உண்டு என்பதை முழுமையாக நம்புவார்கள். தங்களது தொழிலில் மிகவும் உற்சாக உள்ளவர்கள்! தங்களது தொழிலை பெருகச் செய்வது எப்படி என்பதைப் பற்றிய எண்ணத்திலேயே இருப்பார்கள். பலருக்கு அரசாங்கப் பணியிலும், காவல் துறையிலும், இராணுவத்திலும் மிகவும் ஈடுபாடு உண்டு.
Markkandu Devarajah,(L,L,B)

 

No comments:

Post a Comment